10 மணிக்கு மேல தான் பட்டாசு வெடிப்பேன்: பாஜக எம்.பி தடாலடி
உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற முடியாது எனவும் 10 மணிக்கு மேல் தான் பட்டாசு வெடிப்பேன் எனவும் பாஜக எம்.பி தடாலடியாக தெரிவித்துள்ளார்.
தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களில் இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய பிரதேச உஜ்ஜைனி தொகுதியின் பாஜக எம்.பி சிந்தாமணி மாளவியா காலம்காலமாய் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியத்தில் உச்சநீதிமன்றம் தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தீபாவளியன்று இரவு 10 மணிக்கு லட்சுமி பூஜை முடிந்த பிறகே பட்டாசுகள் வெடிப்பேன். தற்பொழுது 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
என் மத நம்பிக்கைகளில் யார் தலையிட்டாலும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. நான் வழக்கம்போல் 10 மணிக்கு மேல் தான் பட்டாசு வெடிப்பேன். என் மீது நடவடிக்கை பாய்ந்தாலும் பரவாயில்லை என அவர் ஆவேசமாக பேசியிருக்கிறார்.