திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 13 ஜனவரி 2023 (22:09 IST)

எஸ்.பி.ஐ வங்கி தேர்வு தேதியை மாற்றுங்கள்: கனிமொழி எம்.பி.

kanimozhi
எஸ்.பி.ஐ வங்கி தேர்வு தேதியை மாற்றுங்கள் என திமுக எம்பி கனிமொழி வங்கி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 
எஸ்.பி.ஐ வங்கி எழுத்தர் பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகள், ஜனவரி 15 பொங்கல் பண்டிகை அன்று நடத்தப்படும் என்று அறிவித்திருப்பது நியாயமற்றது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
 
மேலும் தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்டிகை நாளில், இப்படியான தேர்வுகளை நடத்துவதன் மூலம் ஒரு மாநிலத்தின் பண்பாட்டு உரிமையோடு, தமிழ் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளையும் பறித்திடும் செயல் இது; உடனடியாக, எஸ்.பி.ஐ நிர்வாகம் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்றும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்,
 
 
Edited by Siva