1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 13 ஜனவரி 2023 (17:40 IST)

கடைசியா அன்புக்குரியவரின் அரவணைப்பில் சமந்தா - ரசிகர்கள் நிம்மதி!

நாய்களுடன் சமந்தா வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.
 
நடிகை சமந்தா அறிய வகை தசை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். தொடர்ந்து உடல் நிலை சரிசெய்துகொண்டே படங்களில் நடித்து வருகிறார். 
 
அந்தவகையில் தற்போது சாகுந்தலம் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனிடையே இந்தி படமொன்றில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 
அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது ஓய்வெடுத்து வரும் சமந்தா தற்போது அவரது செல்ல நாய் சமந்தா சோர்ந்து படுத்துறங்கும் போது அவருடனே பாதுகாப்போடு இருக்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். அதற்கு அந்த நாய் நன்றியோடு சமந்தாவை பாதுகாப்பாக பார்த்துக்கொள்வதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.