1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (18:20 IST)

சதுரகிரி கோயிலுக்கு சென்ற பக்தர் மூச்சுத்திணறி உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்..!

Sathuragiri Hills
சதுரகிரி கோவிலுக்கு சென்ற பக்தர் ஒருவர் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆடி அமாவாசை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சென்றனர் என்பதும் அங்கு சுவாமி வழிபாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சிவகங்கை சிவாஜி என்பவர் சென்ற நிலையில் அவர் மலை ஏறிக்கொண்டிருக்கும்போது திடீரென மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார். 
 
இதனை அடுத்து இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட காவல்துறையினர் உடனடியாக சம்பவம் இடத்துக்கு சென்று சிவாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran