1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 22 ஜூலை 2024 (08:52 IST)

ஏமாற்றம் தந்த அம்மாவின் வழியில் மக்கள் பயணம்.. கூட்டமே கூடாததால் சசிகலா அதிருப்தி..!

சசிகலா சமீபத்தில் அம்மா வழியில் மக்கள் பயணம் என்ற பயணத்தை தென் மாவட்டங்களில் இருந்து ஆரம்பித்த நிலையில் அந்த பயணத்திற்கு கூட்டமே இல்லாததால் அவர் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

அதிமுகவை எப்படியும் ஒருங்கிணத்தே தீருவேன் என்ற  எண்ணத்துடன் சசிகலா சமீபத்தில் அம்மா வழியில் மக்கள் பயணம் என்ற பயணத்தை தொடங்கினார். தென்காசியில் இருந்து அவர் தனது பயணத்தை தொடங்கிய நிலையில் தனது பயணத்திற்கு அதிமுக தொண்டர்கள் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.

ஆனால் பயணத்தில் சில நூறு பேர்கள் மட்டுமே கலந்து கொண்டதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்ததாகவும் இப்படியே சென்றால் நிலைமை மோசமாகிவிடும் என்று முடிவு செய்து தென்மாவட்ட முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டதாகவும் தெரிகிறது.

இந்த பயணமே நம்முடைய சமூக ஆட்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்றும் அதை நீங்களே ஆதரிக்கவில்லை என்றால் எப்படி என்று அவர் கேட்டதை அடுத்து இனி வரும் பயணங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் அதிமுகவை ஒருங்கிணைக்கும் சசிகலாவின் முயற்சி பலிக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Edited by Siva