திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 மே 2022 (13:55 IST)

இதுதான் அதிமுகவை காப்பாற்ற சரியான நேரம்! – சசிகலா!

அதிமுகவில் சசிக்கலா மீண்டும் இணைக்கப்படுவாரா என்ற பேச்சு நிலவி வரும் நிலையில் தற்போது சசிக்கலா வெளியிட்டுள்ள அறிக்கை வைரலாகியுள்ளது.

அதிமுக பொதுசெயலாளராக இருந்த சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு விடுதலையான சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என்றும், இணைக்க வேண்டும் என்றும் அதிமுகவிலேயே இருவேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில் அதிமுகவில் உள்ள தனது ஆதரவாளர்களை அடிக்கடி சசிகலா சந்தித்து பேசி வருகிறார்.

இந்நிலையில் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ள சசிகலா “அதிமுகவை காப்பாற்ற உகந்த நேரம் வந்துவிட்டது. மீண்டும் அதே மிடுக்குடன் தலை நிமிரும். நமக்கு நடந்த தீங்கையும், கெடுதலையும் மறந்துவிட வேண்டும். அப்போதுதான் சிறப்பாக செயல்பட முடியும். அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவேன். பொறுமையை கடைபிடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.