நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்திற்கு ஆபத்து வர விடமாட்டேன்: சசிகலா
நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்திற்கு ஆபத்து வர விட மாட்டேன் என சசிகலா ஆவேசமாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஈரோடு கிழக்கு தொகுதியை இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக சார்பில் இபிஎஸ் தரப்பு வேட்பாளர் மற்றும் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இருதரப்பிலும் இரட்டை இலை சின்னத்தை கேட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்திற்கு ஆபத்து வர விடமாட்டேன் என சசிகலா இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார்
மேலும் அவர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரையும் சந்தித்து அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran