1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 12 ஜூலை 2022 (15:21 IST)

நான் இருக்கும்வரை அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது: சசிகலா ஆவேசம்

sasikala
நான் இருக்கும் வரை அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என மிக ஆவேசமாக சசிகலா பேசியுள்ளார். 
 
அனைவரையும் ஒன்றிணைத்து அதிமுக என்ற கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வது தான் என்னுடைய வாழ்க்கை லட்சியமாக உள்ளது என தஞ்சையில் இன்று சசிகலா பேசினார்
 
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பயிற்சி பட்டறையில் பிடித்தவள் நான் என்றும் வீரத்தமிழச்சியாக சொல்கிறேன் நான் இருக்கும் வரை அதிமுகவை யாரும் அபகரிக்கவோ, அழிக்கவோ முடியாது என்று பேசியுள்ளார்
 
 தற்போது அதிமுக எடப்பாடி பழனிச்சாமியின் முழு கட்டுப்பாட்டில் அதிமுக வந்த நிலையில் அவரிடம் இருந்து சசிகலா எப்படி அதிமுக கைப்பற்றுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்