புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 2 ஜனவரி 2022 (11:37 IST)

பொங்கல் தொகுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு சசிகலா வேண்டுகோள்

அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளைமறுநாள் முதல் பொங்கல் தொகுப்பு வழங்க இருக்கும் நிலையில் சசிகலா இது குறித்து முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். 
 
தமிழகத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார். அனைத்து நியாயவிலை கடைகளிலும் நாளை மறுநாள் முதல் பொங்கல் தொகுப்பு வினியோகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் கரும்புகளை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு சேர வேண்டிய தொகையை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.