புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (08:42 IST)

மழை வெள்ள பாதிப்பு: அதிமுக பொதுச்செயலாளர் பெயரில் சசிகலா அறிக்கை

தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 
சென்னையில் கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆறு ஆண்டுகளுக்கு பின் தற்போது தான் ஒரே நாளில் 20 சென்டி மீட்டருக்கு அதிகமான மழை பெய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பல ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. நேற்று செம்பரபாக்கம் ஏரி, பூண்டி ஏரி ஆகியவற்றில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பின்னர் வெள்ள நீர்ரை வெளியேற்றும் பணிகளும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் மக்களுக்கு நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டது. 
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மழை வெள்ள பாதிப்புகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு சீர்செய்ய வேண்டும். மக்களுக்கு விரைந்து நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என கோரியுள்ளார். 
 
வெள்ளத்தால் பாதிக்காத சென்னையை உருவாக்குவேன் என 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்ததாகவும் அந்த கனவு விரைவில் நனவாக வேண்டும் என ஆண்டவனை வேண்டிக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.