Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமமுகவா? அதிமுகவா? சசிகலா முடிவு என்ன? – அமைச்சர் சூசகம்!

Written By Prasanth Karthick
Updated: வெள்ளி, 10 ஜூலை 2020 (10:46 IST)
பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா விடுதலையான பின்பு அதிமுகவை வழிநடத்துவாரா என்பது குறித்து அதிமுக அமைச்சர் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் அக்ரஹாரா சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது தண்டனை காலம் அடுத்த ஆண்டில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் சுதந்திர தினத்தன்று நன்னடத்தை அடிப்படையில் சசிகலா விடுதலையாகலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. தற்போது சசிகலா விரைவில் வெளியாவார் என்றாலும், அதற்கு பிறகான தமிழக அரசியலில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது.

சசிகலா விடுதலையான பின்பு மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவரா என முன்பே அதிமுக பிரபலங்கள் சிலரிடம் கேள்விகள் கேட்கப்பட்டபோது அதை தலைமைதான் முடிவு செய்யும் என கூறியிருந்தார்கள். இந்நிலையில் தற்போது இதுகுறித்து நலப்பணி திட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் “சசிக்கலா விடுதலையாகி வந்த பிறகு அதிமுகவை வழிநடத்துவாரா என்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.

இதனால் சசிகலா விடுதலையான பின்பு அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதா அல்லது அமமுகவை பெரிய கட்சியாக மேம்படுத்தி தன்னிச்சையாக சசிகலா தேர்தல்களை எதிர்கொள்வாரா என்ற விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.

எல்லாம் காட்டு

என் தம்பியவே திட்றீங்களா?!.. விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய சீமான்!..

பிக்பாஸ் தோல்வி!.. விஜய் சேதுபதி மார்கெட் போன நடிகர்!.. பிரபலம் பேட்டி!...

கொலையில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு!.. கனிமொழி ஆவேசம்..

வீடியோ வேண்டாம்.. நிறுத்துங்க.. சென்னை நிகழ்ச்சியில் டென்ஷனான நிர்மலா சீதாராமன்..

இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுவது வருத்தம் தான்: மாணிக்கம் தாகூர்..

அடுத்த கட்டுரையில்
Show comments