வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 25 ஜனவரி 2019 (12:21 IST)

தன்மானத்திற்கு தலைவணங்காத சின்னம்மா!! தொண்டர்களின் அலப்பறைகள்; தீயாய் பரவும் போஸ்டர்

சசிகலாவை அவதூறாக பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது தொண்டர்கள் அடித்த போஸ்டர் பலரின் கவனத்தை திருப்பியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனையில் இருக்கும் சசிகலாவை பலர் விமர்சித்து பேசுவது நாம் அனைவரும் அறிந்ததே.
 
இந்நிலையில் சசிகலாவின் விழுதுகள் சிலர் சசிகலாவை அவதூறாக பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் அடித்து ஊர் முழுக்க ஒட்டியுள்ளனர். அதில் தன்மானத்திற்கு தலைவணங்காத சின்னம்மா!! சோழநாட்டு பேரரசி சின்னம்மாவை அவதூறாக பேசுவதை வண்மையாக கண்டிக்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.