திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 23 ஜனவரி 2019 (14:04 IST)

சொகுசு கேக்குதோ சொகுசு!! சசிகலாவை விடமாட்டேன்: கொதித்தெழுந்த கர்நாடக அமைச்சர்

பெங்களூரு சிறையில் விதிமுறைகளை மீறி சலுகைகளை அனுபவித்து வந்த சசிகலா மீதும் அவருக்கு உதவிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பார்ப்பன அக்ராஹர சிறையில் இருந்து வரும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டதாக சிறைத்துறை உயரதிகாரிகள் மீது பெங்களூர் சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா ஐபிஎஸ் குற்றஞ்சாட்டினார்.





















இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, இந்த குற்றச்சாட்டை அப்போதைய கர்நாடக அரசும் மறுத்தது. அதுமட்டுமின்றி ஐஏஎஸ் அதிகாரி ரூபாவை இடமாற்றமும் செய்தது.
இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்முடிவில் சிறையில் இருக்கும் சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சலுகை வழங்கப்பட்டது உண்மைதான் என அம்பலமாகியது. இதில் சம்மந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய கர்நாடக அமைச்சர் எம்.பி.பாட்டீல், சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த சசிகலா மீதும், அவருக்கு உதவியாய் செயல்பட்ட அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.