புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 30 ஜனவரி 2020 (07:52 IST)

மீண்டும் பரோலில் வருகிறாரா சசிகலா? தமிழக அரசியலில் பரபரப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்துள்ளார். இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே தண்டனை மீதமுள்ள நிலையில் விரைவில் அவர் பரோலில் வெளிவர இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
சசிகலா தண்டனை அனுபவித்த கடந்த 3 ஆண்டுகளில் தனது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த போதும், அவர் உயிர் இழந்த போதும் என இரண்டு முறை மட்டுமே பரோலில் வந்துள்ள நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகன் திருமணம் வரும் மார்ச் 5ஆம் தேதி நடைபெற உள்ளதால் இந்த திருமணத்தில் சசிகலா கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என அவரது உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்
 
இதனை அடுத்து இந்த திருமணத்தில் கலந்துகொள்ள சசிகலா சம்மதித்து விட்டதாகவும் எனவே பரோலுக்கு ஏற்பாடு செய்யும்படியும் தனது வழக்கறிஞரிடம் அவர் அறிவுறுத்தி உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது 
 
சசிகலா மீது இன்னும் மரியாதை வைத்துள்ள அதிமுகவினர் ஒருசிலர் அமைச்சர்களாகவும் இருப்பதால் சசிகலாவின் வருகையின்போது ரகசிய சந்திப்பு நடக்கலாம் என்றும் இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது