1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 27 செப்டம்பர் 2017 (13:10 IST)

அதிமுக அம்மா அணியின் புதிய பொருளாளர் ரெங்கசாமி: சசிகலா ஒப்புதல்!

அதிமுக அம்மா அணியின் புதிய பொருளாளர் ரெங்கசாமி: சசிகலா ஒப்புதல்!

அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கியபோது அவரது பொருளாளர் பதவியை பறித்த சசிகலா அதனை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு அளித்தார்.


 
 
அதிமுக அம்மா அணியும், அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியும் இணைந்த பிறகு மீண்டும் பொருளாளர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் கவனித்து வருகிறார். இந்நிலையில் அதிமுக அம்மா அணியின் புதிய பொருளாளரை சசிகலா நியமித்து ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
 
சசிகலாவுக்கு எதிராக தற்போது ஒட்டுமொத்த அதிமுகவும் உள்ளது. எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் ஒன்று சேர்ந்ததும் தினகரனுக்கு ஆதரவாக 18 எம்எல்ஏக்கள் ஒன்று சேர்ந்தனர். அவர்கள் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருந்து நீக்க பொர்க்கொடி தூக்கி வந்தனர்.
 
ஆனால் அவர்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து சசிகலா குடும்பத்துக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அந்த குடும்பத்தை கட்சியில் இருந்து ஒட்டுமொத்தமாக விரட்ட முடிவெடுத்து செயல்பட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் ஒருவரான தஞ்சாவூர் தொகுதி எம்எல்ஏ ரெங்கசாமி காந்த சில தினங்களாக பெங்களூரில் உள்ள சசிகலாவை சிறையில் சென்று சந்தித்தார். அப்போது ரெங்கசாமியை அதிமுக அம்மா அணியின் பொருளாளராக சசிகலா நியமித்து ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான உத்தரவில் சசிகலா கையெழுத்து இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.