1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 14 ஆகஸ்ட் 2024 (13:47 IST)

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு பேச்சு: உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு

சனாதன ஒழிப்பு பேச்சுக்கு எதிரான வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சனாதன ஒழிப்பு மாநாடு நடந்த நிலையில் அதில் பேசிய உதயநிதி ஸ்டாலின் ’கொசு டெங்கு காய்ச்சல் மலேரியா போல் சனாதனத்தை நாம் எதிர்க்க கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும் என்றும் பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.
 
இதனை அடுத்து பல்வேறு மாநிலங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்குகளை எல்லாம் ஒரே வழக்காக இணைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது ரிட் மனுவில் திருத்தம் செய்ய உதயநிதி ஸ்டாலினுக்கு அவகாசம் அளித்து ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நடந்த போது சனாதன ஒழிப்பு பேச்சுக்கு எதிரான வழக்கில் ஆஜராவதிலிருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது,
 
மேலும் உதயநிதி ஸ்டாலின் மனுவுக்கு பதில் அளிக்க எதிர்மனுதாரர்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
 
Edited by Mahendran