தமிழகத்தில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு .. அரசாணை வெளியீடு
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்நிலையில் தமிழக அரசு , 3 மாவட்டங்களில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்காக செயல்திட்டங்கள் 1872 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு , முதன்முதலாக 1881 ஆம் ஆண்டு முதல் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டிற்கான தகவல்களும் இந்த முதற்கட்ட வேலையின் போது சேகரிக்கப்பட்டன. முக்கியமாக இந்தப் பதிவேட்டில் பதியப்பட்ட அனைத்து இந்தியர்களுக்கும் , இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையத்தால் வழங்கப்பட்ட 12 இலக்க எண்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு நம் ஒட்டுமொத்த இந்தியாவில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுபின் படி 121 கோடியே 2 லட்சமாக இருந்தது. இதில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக தமிழகம் 7 வது இடத்தைப் பிடித்தது. நம் தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை 7, 21, 38,958 ஆகும். தற்போது மக்கள் தொகை உயர்ந்துள்ளதால் மக்கள் தொகையை கணக்கிட வேண்டியும், ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பர் 30 வரை முன் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு இன்று அரசாணை வெளிட்டுள்ளது.