1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J. Durai
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2023 (10:30 IST)

ஜீவசமாதி அடைய முயன்ற சாமியார் மீட்பு!

சிவகங்கையில் தஞ்சாவூர் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில்  உள்ள மேல வாணியங்குடியில் ஆசிரமம் ஒன்று உள்ளது. இதில் மதுரையைச் சேர்ந்த சுரேந்தர் சாமியார் என்பவர் தங்கி இருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்துள்ளார்.


அவரை சந்திக்க மதுரை சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் இந்த நிலையில் மதுரையில் இருந்து வந்த சில பக்தர்களை சாமியாரை சந்திக்க அனுமதிக்க வில்லையாம்.

அவர்கள் விசாரித்த பொழுது சுரேந்தர் சாமி உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவருக்கு மருத்துவ சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை என்றும் அத்துடன் அவரை ஜீவசமாதி அடைய வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் சிவகங்கை நகர மன்றத் தலைவர் துரை ஆனந்திடம் புகார் கொடுத்தனர் அத்துடன் சாமியாரை மீட்டு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கும் படிக்கும் தெரிவித்தனர். இதை தொடர்ந்து நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் நகர் போலீசில் தகவல் தெரிவித்தார் இதன் பேரில் நகர் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார் அங்கு சென்று சாமியாரை மீட்டனர்.

பின்னர் அவரை 108 வாகன மூலம் சிவகங்கை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.