1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 25 மே 2018 (12:15 IST)

மதம் பிடித்த கோவில் யானை பாகனை கொன்றது : சமயபுரம் கோவிலில் பதட்டம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்த யானைக்கு மதம் பிடித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
திருச்சி சமயபுரத்தில் மசினி என்ற யானை உள்ளது. இன்று அந்த யானைக்கு மதம் பிடித்தது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் சமயபுரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது.
 
அந்நிலையில் திடீரென அந்த யானைக்கு மதம் பிடித்தது. இதனால், பாகன் கஜேந்திரனை தூக்கி மிதித்து கொன்றது. மேலும், அங்கிருந்த சிலரை தூக்கி வீசியது. அதில் ஒரு பெண் உட்பட, ஒரு குழந்தை காயமடைந்தனர். இதனால், கோவிலுக்கு வந்தவர்கள் மரண பீதியுடன் நாலாப்புறமும் தெரித்து ஓடினர். இதில் கீழே விழுந்த சில பக்தர்கள் காயமைடந்தனர்.
 
எனவே, கோவிலின் வாயிற் கதவு மூடப்பட்டுள்ளது. உள்ளே இருக்கும் யானை கோபத்துடன் பிளிறிக்கொண்டிருக்கிறது. இதனால், மரணமடைந்த பாகனின் உடலையும் மீட்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 
 
அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மதம் பிடித்த யானையின் கோபத்தை எப்படி தணிப்பது? மயக்க ஊசி செலுத்தி அதை மயங்க செய்யலாமா என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள்.
 
இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.