தாயை ஆபாசமாக திட்டிய உறவினர் – மைனர் சிறுவன் செய்த விபரீத செயல் !
சேலத்தில் தனது தாயைத் தரக்குறைவாகப் பேசிய தந்தையின் சகோதரரை சிறுவன் ஒருவன் கட்டையால் தாக்கியதில் அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்த சமபவம் நடந்துள்ளது.
சேலத்தைச் சேர்ந்த சகோதரர்கள் சரவணன் மற்றும் முருகேசன். இருவரும் கட்டிடத் தொழிலாளியாக ஒன்றாக வேலைப் பார்த்து வருகின்றனர். முருகேசனுக்கு திருமணமாகி 15 வயதில் மகன் ஒருவர் இருக்கிறார். அண்ணன் தம்பி இருவருக்கும் அடிக்கடி அடிக்கடி சண்டை நடப்பது வாடிக்கையாக இருந்துள்ளது.
வழக்கம்போல நேற்றும் சரவணன் குடித்துவிட்டு வந்து முருகேசனையும் அவரது மனைவியையும் ஆபாசமாகப் பேசியுள்ளனர். தனது தாயை ஆபாசமாகப் பேசியதைக் கேட்ட முருகேசனின் மகன் உருட்டுக்கட்டையால் சரவணனைத் தாக்கியுள்ளான். இதில் எதிர்பாராத விதமாக சம்பவ இடத்திலேயே சரவணன் உயிரிழந்துள்ளார். தகவலறிந்து அவரது உடலைக் கைப்பற்றிய போலிஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் சிறுவனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.