புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (08:54 IST)

கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் உயிரிழப்பு:
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனாவைரஸ் பாதிப்பு அதிகமாகி கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதும், தமிழகத்தில் கிட்டத்தட்ட 3000 பேர் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கொரோனாவால் ஏற்படும் பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சி தொண்டர்களுக்கும் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் 
 
அந்த வகையில் சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெயப்பிரகாஷ் என்பவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனை அடுத்து அவர் கடந்த நான்கு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயப்பிரகாஷ் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது இதனை அடுத்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்