1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 ஜூன் 2023 (17:25 IST)

சென்னை பல்கலைக்கழக கெளரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு..!

Madras University
சென்னை பல்கலைக்கழக கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்ட நிலையில் தற்போது அந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. 
 
சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் ரூ.20,000-ல் இருந்து ₹30,000-ஆகவும், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஊதியம் ரூ.15,000-லிருந்து ரூ.20,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது! 
 
இந்த ஊதிய உயர்வு 2023-24ம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது என சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதை அடுத்து விரிவுரையாளர்கள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran