1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 14 ஜூன் 2024 (08:42 IST)

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு..!

assembly
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளதை அடுத்து அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

2016 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் பெற்று வரும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியருக்கான அகவிலைப்படி வீதம் அடிப்படை ஊதியம் அகவிலை ஊதியத்தில் 239 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் மே மாதம் வரையிலான அகவிலைப்படி நிலுவைத்தொகை நடைமுறையில் உள்ள பணமில்லா வர்த்தக முறையான மின்னணு சேவை மூலம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva