1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 17 அக்டோபர் 2020 (12:06 IST)

திமுக எம் எல் ஏவின் மகன் கொரோனாவால் உயிரிழப்பு – அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திமுக சைதாப்பேட்டை எம் எல் ஏ மா. சுப்பிரமணியத்தின் மகன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

கொரோனா காரணமாக பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதில் அரசியல் பிரமுகர்களும் தப்பவில்லை. திமுக எம் எல் ஏ ஜெ அன்பழகன் மற்றும் அமமுக பொருளாளர் வெற்றிவேல் ஆகியோர் கொரோனாவால் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்போது சைதாப்பேட்டை எம் எல் ஏ மா. சுப்பிரமணியத்தின் இரண்டாவது மகன் அன்பழகன் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

மா க சுப்பிரமணியத்துக்கு 2 வாரங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு உறுதியானது. அவரது குடும்பத்தில் அவர் மனைவி மற்றும் இளைய மகன் அன்பழகனுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து இருவரும் சிகிச்சை பெற்றனர். இதில் அன்பழகன் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.