1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 2 டிசம்பர் 2015 (13:17 IST)

சைதாப்பேட்டை பாலம் மூழ்கும் அபாயம் : போக்குவரத்துக்கு தடை

சென்னையில், பெய்து வரும் கனமழை காரணமாக அடையாறு ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் சைதாப்பேட்டை பாலம் மூழ்கியது. 


 
 
கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சாரம் இல்லை. பேருந்துகள் இயக்கப்பட வில்லை. 
 
சென்னையை சுற்றியுள்ள பல ஏரிகள் முழுவதும் நிரம்பியது. இதனால் அந்த ஏரிகளிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பெரும்பலான சாலைகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. 
 
மேலும், கூவம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் சென்னை சைதாப்பேட்டை மறைமலை பாலத்திற்கு மேலே தண்ணீர் செல்கிறது. இந்த பாலம் வழியாக சென்னையில் பல முக்கிய பகுதிகளுக்கு செல்ல முடியும்.
 
மழை வெள்ளம் காரணமாக, முதலில் கிண்டி-சைதாப்பேட்டை வழி அடைக்கப்பட்டது. அதன் பின், சைதாப்பேட்டை-கிண்டி பாதையிலும் தண்ணீர் புகுந்ததால் அங்கும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
 
காவல்துறை அதிகாரிகள், அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் அங்கே விரைந்துள்ளனர்.