திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 5 பிப்ரவரி 2020 (13:09 IST)

அப்படியே 10வது +2 தேர்வையும் ரத்து பண்ணிடுங்க! – எஸ்.வி.சேகர் கிண்டல்

தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு ரத்து செய்துள்ளதற்கு பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார்.

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு தமிழக அரசு பொதுத்தேர்வு அறிவித்திருந்த நிலையில் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்ததால் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் நன்றி தெரிவித்துள்ளனர்.

5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவித்தபோது அதை ஆதரித்து பதிவிட்டு வந்தவர் பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர். தற்போது அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் ” 5வது 8 வது பொதுத்தேர்வு ரத்து கல்வித்துறை உத்தரவு. அப்படியே 10 வது 12 வது தேர்வையும் ரத்து பண்ணிடுங்க. பசங்க விளங்கிடுவாங்க. வால்க தமில்.” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

அதேசமயம் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து, தனுஷ் மற்றும் சூர்யா உள்ளிட்ட திரைத்துறையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.