திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 ஜனவரி 2020 (15:48 IST)

நாம் தமிழரை கலாய்த்த எஸ்.வி.சேகர் – கமெண்டில் வெச்சு செய்த தம்பிகள்!

நாம் தமிழர் கட்சியினர் பதிவு ஒன்றை கிண்டல் செய்யும் விதத்தில் எஸ்.வி.சேகர் பேசிய நிலையில் அதற்கு பதிலடி தரும் வகையில் பதிவிட்டுள்ளனர் நாம் தமிழர் கட்சியினர்.

ரஜினிகாந்த் அரசியல் பிரசேவம் குறித்து பதிவிட்டிருந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒருவர் ரஜினி சட்டசபை தேர்தலில் நிற்கும் போது அவரது வேட்பாளர்கள் அனைவருக்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் சிம்ம சொப்பனமாக இருக்க வேண்டும் எனவும், பிறகு ரஜினி கட்சியை கலைத்து விட்டு போய் விடுவார்கள் என்றும் பதிவிட்டுள்ளார். இப்படி பதிவிடுவது நாம் தமிழர் கட்சிக்கு ஒன்றும் புதிதல்ல.

ஆனால் அந்த பதிவை ரீட்வீட் செய்த பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் ”சூப்பர். அடுத்த ஜோக் சொல்லு தம்பி. அதுக்காவது சிரிப்பு வருதான்னு பாப்போம்.” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

இதனால் எஸ்.வி.சேகரின் ட்விட்டர் பதிவில் நுழைந்த நாம் தமிழர் கட்சியினர் அவர் இதற்கு முன் பேசிய 2000 ரூபாய் மைக்ரோ சிப் சர்ச்சை உள்ளிட்ட பலவற்றை சுட்டிக்காட்டி, ‘இதை விடவா நாங்க ஜோக் பண்ணிட்டோம்” என்ற ரீதியில் பதிவிட்டுள்ளனர். அவர்களது கேலியான கமெண்டிற்கு பதில் சொல்ல எஸ்.வி.சேகருக்கு ஆதரவாகவும் சிலர் வந்து பிழையில்லாமல் முதலில் தமிழில் எழுதுங்கள் என சொல்ல, ட்விட்டர் தளத்தில் பாஜக – நாம் தமிழர் கட்சியினரிடையே கமெண்டில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.