ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 13 அக்டோபர் 2017 (22:02 IST)

சென்னையில் பிச்சை எடுத்தே தீருவேன்; அடம் பிடிக்கும் ரஷ்யர்!!

ரஷ்யாவை சேர்ந்த சுற்றுலா பயணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவில் வாசலில் பிச்சை எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 


 
 
ரஷியாவை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் காஞ்சீபுரத்துக்கு சுற்றுலா வந்து, செலவுக்கு பணம் இல்லாமல் கோவில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்து பரபரப்பு ஏற்படுத்தினார். 
 
இதன் பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் ரஷிய வாலிபரிடம் பிச்சை எடுக்க கூடாது என்று அறிவுரை கூறினர். மற்ற உதவிகளுக்கு சென்னையில் உள்ள ரஷிய தூதரகத்தை அணுகுமாறு கூறி பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர். 
 
சென்னை தி.நகரில் சுற்றித்திரிந்த அவர் ரஷியா- உக்ரைன் இடையே ராணுவ நடவடிக்கை காரணமாக பதட்டம் நிலவுவதால் உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்தேன் என கூறியுள்ளார்.
 
எப்போது ரஷியா திரும்புவீர்கள் என்று கேட்டதற்கு, தொடர்ந்து சென்னையில் தங்கி இருந்து பிச்சை எடுப்பேன் என்று ரஷிய வாலிபர் தெரிவித்துள்ளார்.