1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2017 (15:03 IST)

விஜய்யுடன் திடீரென மோத தயாராகும் சரத்குமார்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' திரைப்படம் தடைகள் பல கடந்து வரும் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இதே தினத்தில் வேறு சில படங்களும் ரிலீஸாகவுள்ளது. நயன்தாராவின் 'அறம்' நவம்பருக்கு தள்ளி வைக்கப்பட்ட போதிலும் சசிகுமாரின் 'கொடி வீரன்', கார்த்திக் சுப்புராஜின் 'மேயாத மான்' உள்ளிட்ட ஒருசில படங்கள் மெர்சலுடன் மோதுகிறது.



 
 
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென சரத்குமாரின் 'சென்னையில் ஓரு நாள் 2' திரைப்படம் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று சற்றுமுன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் கோலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
விஜய்யின் 'மெர்சல்' திரைப்படத்திற்கு திடீரென கடைசி நேரத்தில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்படும் என்று ஒருசில வதந்திகள் பரவி வருவதால்தான் சரத்குமார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.