வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 1 ஜனவரி 2021 (10:50 IST)

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த ஆர்.டி.ஐ தகவல்!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த நிலையில் இதற்கான இடம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றதாக கூறப்பட்டது. ஆனால் திடீரென மாநில அரசு இன்னும் இடத்தை கையகப்படுத்த கொடுக்கவில்லை என மத்திய அரசும், கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வாங்க மத்திய அரசு மறுப்பதாக மாநில அரசும் மாறி மாறி குற்றம் சுமத்தி கொண்டிருந்தன 
 
இந்த நிலையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையுமா? அப்படி அமையும் என்றால் எப்போது அமையும்? என்று தென்காசியை சேர்ந்த பாண்டியராஜா என்பவர் ஆர்.டி.ஐயில் கேள்வி ஒன்றை கேட்டுள்ளார் 
 
இந்த கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சகம் பதில் அளித்துள்ளது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மார்ச் 31-க்குள் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது 
 
மார்ச் மாதத்திற்குள் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி அதன் பிறகு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் துவங்கும் என்று இந்த பதிலில் இருந்து தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது