1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 1 ஏப்ரல் 2023 (11:34 IST)

ஆருத்ரா கோல்டு மோசடி - நடிகர் ஆர்.கே.சுரேஷ் திடீர் தலைமறைவு!

ஒரு லட்ச ரூபாய் கட்டினால் 30 ஆயிரம் வட்டி தருவதாக சென்னையைச் சேர்ந்த ஆரூத்ரா கோல்ட் நிறுவனம் மோசடி பெருவாரியான மக்களை ஏமாற்றியுள்ளது.  இதையடுத்து சுமார் ரூ.2438 கோடி ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகரும் பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர். 
 
ஆருத்ரா நிறுவன இயக்குநர்களில் ஒருவரான ரூசோ என்பவரிடம் நடத்திய விசாரணையில் இந்த வழக்கை ஒன்றிய அரசின் மூலம் ஒன்றும் இல்லாமல் செய்வதற்காக ரூ.12 கோடி கொடுத்ததாகவும், ஆனால் பணத்தை வாங்கிய ஆர்.கே.சுரேஷ் ஏமாற்றி விட்டு துபாய்க்கு சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.