செவ்வாய், 4 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 19 ஆகஸ்ட் 2023 (18:04 IST)

மகளிர் உரிமை திட்டம் இந்தியாவின் மிகப்பெரிய பிராடு திட்டம்: அண்ணாமலை

மகளிர் உரிமை திட்டம் இந்தியாவின் மிகப்பெரிய பிராடு திட்டம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
என் மண் என் மக்கள் பாதை யாத்திரையில் இருக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை பாளையங்கோட்டையில் பேசிய போது ’திமுக ஆட்சி என்பது தமிழகத்திற்கான சாபக்கேடு என்றும் நீட் சாதாரண மக்களுக்கு எதிரானது அல்ல என்றும் திமுகவிற்கும் திமுகவைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி அதிபர்களுக்கு மட்டுமே எதிரானது என்று தெரிவித்தார்.
 
மேலும் 505 ஊசி போன வடைகளை தான் தேர்தல் அறிக்கையாக திமுக கொடுத்தது என்றும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள எதையுமே நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.  
 
27 மாதங்களாக தேர்தலில் வாக்குறுதியாக கொடுத்த எந்த திட்டங்களையும் திமுக நிறைவேற்றவில்லை என்றும் ராமநாதபுரத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் எதையும் செய்யவில்லை என வாய் கூசாமல் முதலமைச்சர் பொய் சொல்கிறார் என்றும் அண்ணாமலை விமர்சனம் செய்தார்.  
 
கடன் வாங்குவதில் தமிழகம் நம்பர் ஒன் மாநிலமாக இருக்கிறது என்றும்  மகளிர் உரிமை திட்டம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய பிராடு திட்டம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran