ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (13:24 IST)

இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 திட்டம் - பட்ஜெட்டில் அறிவிப்பு!

குடும்பத்தலைவர் என்பது பெண்ணாக இருந்தால் மட்டுமே உரிமைத்தொகை என்பது தவறான புரிதல் என விளக்கம்.

 
தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்த நிலையில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டமும் விரைவில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு பட்ஜெட் கூட்டத்தொடரில் முடிவு காணப்பட்டுள்ளது. 
 
ஆம், குடும்பத்தலைவர் என்பது பெண்ணாக இருந்தால் மட்டுமே உரிமைத்தொகை என்பது தவறான புரிதல். உதவித்தொகை இல்லத்தரசிகளுக்கானது என்பதால் குடும்பத்தலைவர் பெயரை மாற்றத் தேவையில்லை. இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தகுதியான குடும்பங்களை கண்டறிந்து அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.