1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 24 ஜூன் 2021 (08:49 IST)

ஜூலை 26 வரை ரூ.1000 பஸ் பாஸ் செல்லும்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மே மாதம் ரூபாய் 1000 பஸ் பாஸ் எடுத்தவர்களுக்கு ஜூலை 15 வரை அந்த பஸ் பாஸ் செல்லும் என்றும் அதுவரை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்திருந்தது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த கால அளவை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து சற்றுமுன் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் மே மாதம் ரூபாய் 1000 பஸ் பாஸ் எடுத்தவர்கள் ஜூலை 26 வரை பயணம் செய்து கொள்ளலாம் என்றும் ரூபாய் 1000 பஸ் பாஸ் ஜூலை 26 வரை செல்லும் என்று அறிவித்துள்ள 
 
இதனை அடுத்து பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு நேரத்தில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் அந்த பாஸை பயன்படுத்தவில்லை என்பதும் அதனால் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது