அத்திவரதரின் விஐபி லிஸ்ட்டில் பிரபல ரவுடி..பக்தர்கள் கொந்தளிப்பு
காஞ்சிபுரம் அத்திவரதரை, பிரபல ரவுடி விஐபி வரிசையில் நின்று தரிசித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி தந்து வருகிறார். அத்திவரதரை சந்திக்க பல அரசியல் தலைவர்கள், நடிகர்கள் ஆகியோர் விஐபி வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். இவர்களை தொடர்ந்து நேற்று விஐபி வரிசையில் வரிச்சூர் செல்வம் என்ற பிரபல ரவுடி தரிசனம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரிச்சூர் செல்வத்தின் மீது போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன. இப்படிப்பட்ட ரவுடிகளுக்கு விஐபி பாஸ் வழங்குவது, அத்திவரதர் பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசியல் தலைவர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரின் வரிசையில் தற்போது ரவுடிகளும் சேர்ந்துள்ளார்கள் என்று சமூக வலைத்தலங்களில் கேலியாக சிலர் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.