No Mask No Entry - சென்னை ஏர்போர்ட்டில் கெடுபிடி!
சென்னை விமான நிலையத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 476 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,58,445 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 221 என்றும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,268 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் அனைத்து பகுதியிலும் 'நோ மாஸ்க், நோ எண்ட்ரி' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன.
மேலும் விமான பயணிகள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றுகளோடு தான் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.