ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 16 ஜூன் 2022 (08:44 IST)

கலக்கத்தில் தமிழகம்! 3 மாதங்களுக்கு பிறகு முதல் கொரோனா பலி

தமிழகத்தில் மூன்று மாதங்களுக்கு பிறகு தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் கொரோனாவால் பலி.

 
நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 476 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,58,445 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 169 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 01 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 221 என்றும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,268 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
 
தமிழகத்தில் இரண்டு வாரத்தில் கொரோனா பரவல் 4 மடங்கு அதிகரித்துள்ளது. 13 மாவட்டங்களில் மட்டுமே அதிகரித்துவரும் தொற்று விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாகும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
 
அதோடு தமிழகத்தில் மூன்று மாதங்களுக்கு பிறகு தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் எந்தவித நோயும் இல்லாத நிலையில், கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.