பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு: தமிழக அரசு விரைவில் ஆலோசனை!
தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடு குறித்து வரும் 28 ஆம் தேதி அமைச்சர்கள் ஆலோசனை.
கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பட்டாசு வெடிக்கும் நேர கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முன்பு ஒரு சில நாட்களுக்கு முன் இந்த அறிவிப்பு வெளிவரும்.
கடந்த ஆண்டு சென்னையில் காலை 6 மணி முதல் 7 மணி வரை வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மீறி பட்டாசு வெடித்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதே போல இந்த ஆண்டும் தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட வாய்ப்புள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடு குறித்து வரும் 28 ஆம் தேதி அமைச்சர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
வருவாய்த்துறை, தொழிலாளர்நலத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை பங்கேற்கின்றனர். தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.