1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 28 அக்டோபர் 2019 (07:42 IST)

4 மணி நேரத்தில் 10 அடி மட்டுமே தோண்டியதா ரிக் இயந்திரம்?

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்ப் பட்டி என்ற கிராமத்தில் சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்ட நிலையில் அந்த குழந்தையை உயிருடன் மீட்க கடந்த இரண்டு நாட்களாக மீட்பு படையினர் போராடி வருகின்றனர் 
 
இந்த நிலையில் ஆழ்துளை கிணறு அருகே ஒரு சுரங்கம் அமைக்கப்பட்டு அதன் மூலம் குழந்தையை வெளியே எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நெய்வேலி இருந்து ரிக் என்ற இயந்திரம் வரவழைக்கப்பட்டு, அதன் மூலம் குழி தோண்டும் பணி நேற்று காலை தொடங்கப்பட்டது
 
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் திடீரென ரிக் இயந்திரம் பழுது ஆனதை அடுத்து இரண்டாவது ரிக் இயந்திரம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அந்த இயந்திரம் இன்று அதிகாலை 4 மணி முதல் தோண்டும் பணியை ஆரம்பித்த நிலையில் இரண்டாவது இயந்திரம் நான்கு மணி நேரத்தில் வெறும் 10 மட்டுமே தோண்டி உள்ளதாக தெரியவந்துள்ளது 
 
கடினமான பாறைகள் இருப்பதால் தோண்டும் பணி தாமதம் ஆவதாகவும், மொத்தம் 110 அடி தோண்ட வேண்டிய நிலையில் நான்கு மணி நேரத்தில் 10 அடி மட்டுமே தோண்டப்பட்டால் இன்னும் பல மணி நேரம் இந்த சுரங்கம் அமைக்கும் பணி நீடிக்கும் என தெரிவதால் பதட்டம் நிறைந்து உள்ளது
 
இருப்பினும் விடாமுயற்சியுடன் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எப்படியாவது சுர்ஜித்தை உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் ஒரே எண்ணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது