ஆரம்ப சுகாதார மையத்தை மீண்டும் திறக்க கோரிக்கை!
கோவை புலியகுளம் பகுதி ரெட் பில்ஸ் ரோட்டில் இயங்கி வந்த மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையம் மருத்துவர் மற்றும் செவிலியர் இல்லாத காரணத்தால் சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதனை அடுத்து தற்போது கோவை மாநகராட்சி அதற்கான நிதியை ஒதுக்கி மீண்டும் அந்த சுகாதார மையம் மறுசீரமைப்பு செய்து கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த சுகாதாரம் மையம் தற்போது வரை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருப்பதால் அப்பகுதியில் உள்ள மக்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சென்று பிற ஆரம்ப சுகாதார மையத்தினை நாட வேண்டிய சூழல் நிலவி வருவதால் அதனை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வலியுறுத்தி 66 வது வார்டு சிபிஎம் கிளை செயலாளர் நாகராஜ் கோவை மாநகராட்சி ஆணையாளருக்கு மனு அளிக்க உள்ளார்.
மேலும் அவரது மனுவில் 24 மணி நேரமும் மருத்துவம் பார்ப்பதற்கு மருத்துவரையும் செவிலியரையும் நியமிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார். இதற்காக அவர் அப்பகுதி மக்களிடம் கையொப்பம்ப பெற்று வருகிறார்.