குடியரசு தினம்: சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றம்.. சிறப்பு பூஜை..!
நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், டெல்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் சென்னையில் கவர்னர் ஆர்.என். ரவி ஆகியோர் கொடியேற்றினார்.
இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிதம்பரம் நடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் இன்றைய தேசிய கொடி ஏற்றப்பட்ட தாகவும், கொடியேற்றுவதற்கு முன்பாக தீட்சிதர்கள் கோயில் கமிட்டி செயலாளர் தலைமையில் வெள்ளி தாம்பாளத்தில் தேசிய கொடி வைக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, மேளதாளங்களுடன் ஊர்வலமாக தேசிய கொடி கொண்டு வரப்பட்டு, 152 அடி உயரம் உள்ள கிழக்கு கோபுரத்தில் கொடியேற்றப்பட்டது. அதன் பின்னர் பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
தமிழகத்தின் ஆன்மீக அடையாளங்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேசிய கொடி ஏற்றப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Edited by Siva