புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வியாழன், 23 ஏப்ரல் 2020 (16:04 IST)

தமிழகத்தில் என்னென்ன பணிகளை மேற்கொள்ளலாம்...? அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் ஊரடங்கத் தளர்வுகளின்போது, எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில், அரசாணை கிராமப்புற பகுதிகளில் நீர்நிலைகளை தூர்வாருதல் நீர்ப்பாசனம், அணை பாதுகாப்பு, சாலை, பாலங்கள், செங்கல் சூளை போன்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளில் கட்டுமானம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம் குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள், மின்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது. அதேபோல், 100 நாள் வேலைத் திட்டத்துக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்கள் 33% ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.