வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 1 ஆகஸ்ட் 2020 (09:03 IST)

தமிழகத்தில் அமலுக்கு வந்தது 7 ஆம் கட்ட ஊரடங்கு: தளர்வை மீறி ஹோட்டல்களுக்கு தடா!!

தமிழகத்தில் நேற்றோடு 6 ஆம் கட்ட ஊரடங்கு முடிந்து இன்று முதல் 7 ஆம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. 
 
கொரோனா பாதிப்பினால் இதுவரை 6 கட்ட ஊரடங்குகள் அமலில் உள்ள நிலையில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு முடிந்த நிலையில் 7 ஆம் கட்ட ஊரடக்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அமலுக்கு வந்தது. 
 
கடந்த முறை அறிவிக்கப்பட்ட அதே தளர்வுகளும் கட்டுபாடுகளும் தான் இந்த முறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடைகள் திறக்கப்படும் நேரம் கூடுதலாக ஒரு மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல சின்ன கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், 50% இருக்கைகளுடன் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அரசு தளர்வுகள் அளித்தது. தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையிலும் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடும் தளர்வு சென்னையில் வரும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) முதல் கடைபிடிக்கப்பட உள்ளதாக சென்னை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது என தகவ வெளியாகியுள்ளது.