Daily Horoscope
✕

1.25 லட்சம் லஞ்சம் பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர்(RDO) கைது

Updated: புதன், 20 டிசம்பர் 2017 (11:15 IST)
மதுராந்தகம் அருகே வீட்டுமனைப் பிரிவிற்கு அங்கீகாரம் தர லஞ்சம் பெற்ற மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வின், மேலாளர் மோகன் ஆகியோர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தனது வீட்டுமனை பிரிவிற்கு அங்கீகாரம் வழங்கக் கோரி மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அங்கீகாரம் வழங்க வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வின், மேலாளர் மோகன் இருவரும் சீனிவாசனிடம் ரூ. 1.25 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளனர். 
 
இதையடுத்து சீனிவாசன், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகாரளித்தார். ரசாயனம் தடவிய பணத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வின், மோகன் ஆகியோரிடம் சீனிவாசன் கொடுத்தபோது மறைவிலிருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் செல்வின் மற்றும் மோகனை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

எல்லாம் காட்டு

கனடா செல்கிறார் பிரதமர் மோடி.. புதிய பிரதமர் மார்க் கார்னியுடன் முக்கிய பேச்சுவார்த்தை..

கூலிங் ஃபேன் உடன் ஒன் பிளஸ் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட்போன்.. கேமிங் பிரியர்களுக்கு செம்ம போன்...

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்த தேர்தல் ஆணையம்...

வங்கக்கடல், அரபிக்கடல்.. ஒரே நேரத்தில் 2 புயல்கள்.. தமிழகத்தில் கொட்ட போகுது கனமழை...

கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றுவிடுவார் என்று ஒரு பெண்மணி என்னிடம் சொன்னார்... திருமாவளவன் திடுக் தகவல்...

அடுத்த கட்டுரையில்
Show comments