திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 2 மார்ச் 2017 (19:47 IST)

அப்பல்லோவில் ஜெ.வை பார்க்க சசிகலா அனுமதி மறுத்த காரணம் - நத்தம் விஸ்வநாதன் பகீர் தகவல்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா  உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, ஜெ.வை சந்திக்க யாரையும் சசிகலா அனுமதிக்கவில்லை.


 

 
75 நாட்கள் ஜெயலலிதாவிற்கு சிகிச்சையளித்தும், யாரையும் சந்திக்க அனுமதி அளிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர் வித்யாசாகர் ராவ், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக அரசியல் தலைவர் உட்பட எவரும் ஜெ.வின் அறைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இது பொதுமக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஜெ.வின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர்.


 

 
இந்நிலையில், தற்போது ஓ.பி.எஸ் அணியில் இணைந்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய போது “மருத்துவமனையில் ஜெயலலிதாவை யாராவது சந்தித்தால், அவர்களிடம் உண்மையை அவர் சொல்லி விடுவார் என்பதற்காகவே, யாரையும் சந்திக்கவிடாமல் சசிகலா தடுத்தார்” என்ற பகீர் தகவலை வெளியிட்டார்.
 
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் முன், போயஸ் கார்டனில் ஜெயலலிதா, சசிகலாவால் தாக்கப்பட்டார் என ஓ.பி.எஸ் அணி ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
நத்தம் விஸ்வநாதனின் இந்த பேச்சு அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.