வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 25 அக்டோபர் 2024 (10:14 IST)

இஸ்ரேல் சம்மதித்தால் போரை நிறுத்த தயார்!? பின்வாங்கும் ஹமாஸ்! - இஸ்ரேலின் முடிவு என்ன?

Israel War

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் தொடர்ந்து வரும் நிலையில் போரை நிறுத்த ஹமாஸ் சம்மதித்துள்ளது.

 

 

இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதனால் காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் வான்வழி, தரை வழி தாக்குதல்களினால் 41 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர்.

 

இந்நிலையில் லெபனானில் இருந்து செயல்படும் ஹெஸ்புல்லா அமைப்பும் ஹமாஸ்க்கு ஆதரவாக இஸ்ரேலை தாக்கியதால், பதிலுக்கு இஸ்ரேல் லெபனான் நாட்டிற்குள் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் ஹமாஸ், ஹெஸ்புல்லா அமைப்புகளின் முக்கிய தலைவர்கள், தளபதிகளை இஸ்ரேல் குறிவைத்து கொன்று வருகிறது.

 

இந்நிலையில் போரை நிறுத்த சம்மதம் தெரிவித்து ஹமாஸ் தூது விட்டுள்ளது. போர் நிறுத்தம் குறித்து பேசியுள்ள ஹமாஸ் மூத்த அதிகாரி “ இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு உறுதியளித்தால் ஹமாஸ் சண்டையை நிறுத்த தயாராக உள்ளது. இஸ்ரேல் காசாவிலிருந்து வெளியேறுவதுடன், இடம் பெயர்ந்த மக்களை காசாவிற்கும் மீண்டும் அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இஸ்ரேல் இந்த கோரிக்கைகளை ஏற்று போரை நிறுத்துமா அல்லது தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K