புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 ஜனவரி 2020 (12:08 IST)

ஸ்டாலின் விருது கிடைக்காத விரக்தியில் பேசுகிறார்! – ஆர்.பி.உதயகுமார்!

மத்திய அரசு விருது கொடுத்ததை ஸ்டாலின் விமர்சித்துள்ளது குறித்து அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள மாநிலங்களின் தரவரிசை பட்டியலில் சிறந்த நல்லாட்சி பட்டியலில் தமிழகத்துக்கு முதலிடம் அளிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின் “தமிழகத்துக்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடித்து உதைக்க வேண்டும்” என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சை கண்டித்துள்ள எச்.ராஜா அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலினி பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ” மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் எதிரானவர் என்பதை தனது பேச்சின் மூலம் நிரூபித்துள்ளார். ஐந்து முறை ஆட்சியில் இருந்தும் தங்களுக்கு எதுவும் விருது கிடைக்காத விரக்தியில் அடிப்பேன் உதைப்பேன் என பேசிக் கொண்டிருக்கிறார்” என கூறியுள்ளார்.