வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 21 ஜூன் 2021 (16:30 IST)

15 நாளில் ரேசன் கார்டு... மக்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் துவங்கியது. இது முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் கூட்டத்தொடராகும்.

இந்த கூட்டத்தொடரில் தொடக்கமாக ஆளுனர் உரையை தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் வாசித்து வருகிறார். அதில் பல முக்கிய சிறப்பம்சங்கள் இருந்தன.

அதிலொன்று  ரேசம் அட்டைக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டுகள் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் ரேசன் கார்டுக்கு பல ஆண்டுகளாக அலைந்துகொண்டிருக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.

இனிமேல் மாதக் கணக்கில் ரேசன் கார்டிற்காக வேலையைக் கெடுத்துக் கொண்டு அலையத் தேவையிருக்காது என்றபடி ஆளுநர் உரையில்  ரேசன் அட்டைக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டுகள் அளிக்கப்படும் என்ற அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.