ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (13:01 IST)

திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிகரித்த ரேஷன் கார்டு விண்ணப்பம்!

மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை புதிதாக ஸ்மார்ட் கார்டு பெறுவதற்கு சுமார் 7 லட்சம் நபர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல். 

 
தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்த நிலையில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதோடு குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டமும் விரைவில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அந்த வகையில் மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலும் தமிழகம் முழுவதும் 7,19,895 நபர்கள் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு கோரி விண்ணப்பம் வெளியாகியுள்ளது. மே மாதத்தில் மட 1,26,414 நபர்களும் , ஜூன் மாதம் 1,57,497 நபர்களும், ஜூலை மாதத்தில் 2,61,529 நபர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
 
இதில் 4,52,188 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1,35,730 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 3,38,512 விண்ணப்பங்களுக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளதாகவும், 1,13,676 ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி நடைப்பெற்று வருவதாகவும், 1,31,977 விண்ணப்பங்கள் வைப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.