திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (09:46 IST)

லஞ்ச ஒழிப்புத்துறை அடுத்த அதிரடி; எஸ்.பி.வேலுமணி வங்கி கணக்குகள் முடக்கம்!

டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அவரது வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது.

எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த போது பதவியை தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட அவருக்க சொந்தமான 60 இடங்களில் சோதனை நடைபெற்றது.

அதை தொடர்ந்து தற்போது முறைகேடு வழக்கு காரணமாக அவரது வங்கி கணக்குகள் மற்றும் லாக்கர்களை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கியுள்ளது. தொடர்ந்து முன்னாள் அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்துவரும் நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.